சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்பது தெய்வ புலவர் திருவள்ளுவர் வாக்கு. நம் நாடானது விவசாயத்தினை மட்டுமே உயிர் மூச்சாய் கொண்டுள்ளது.நம் நாட்டில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். இருந்தும் விவசாயம் என்பது விவசாயிகளுக்கு ஒரு நஷ்ட்டம் ஏற்ப்படுத்தும் தொழிலாகவே உள்ளது. அதிகப்படியான நோய் தாக்குதல், சரியான மழை இன்மை,அல்லது அதிகப்படியான மழை, கட்டுபடியாகாத ,நஷ்ட்டம் ஏற்படுத்தும் விலை ,விவசாய கூலி ஆள் பற்றாகுறை, போன்ற பல்வேறு காரணங்களால் இன்று விவசாயிகள் விவசாயத்தினை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடும் சூழ்நிலை தொடங்கிவிட்டது.அரசாங்கமும் விவசாயத்தை தொழிலாக பாராமல் விவசாயம் என்பது வாழ்க்கை என்று மக்களுக்கு புரியவைத்து,அரசு எடுத்ததற்கெல்லாம் வெளிநாட்டு இறக்குமதியை நாடாமல் கிராமிய பொருளாதரத்தை மேம்படசெய்து விவசாய மக்களின் வாழ்க்கையை உயர்த்தவேண்டும் என்ற நோக்கோடு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்
விவசாயம் என்பது தொழில் அல்ல! விவசாயம் என்பது மக்களின் வாழ்க்கை என்பதை புரிந்து விவசாயத்தோடு சேர்ந்த தொழில்களான ஆடு மாடு,கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து.
விவசாயத்தை வளம் பெற செய்வோம். நம்முடைய இந்த பதிவானது. விவசாயம் செய்யும் முறை, லாபகரமாக எவ்வாறு செய்வது?,அதற்க்கான தொழில் நுட்பங்கள் என்ன, பயிர்களின் வகை எந்த நிலத்தில் என்ன என்ன சாகுபடி செய்யலாம். போன்ற அனேக விவரங்களை தினம் தினம் நீங்கள் இதில் கற்க்கலாம்.மேலும் நம்முடைய கிராமிய பொருளாதாரத்தையும் மேம்பட செய்து நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம்.
இப்படிக்கு உங்கள் விவசாய தோழன்
அ.உதயகுமார்